News

faq-tamil

July 15, 2021

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI): அதிகம் கேட்கப்படும் கேள்விகள் (FAQ) (ஏப்ரல் 20, 2021)

எழுதியவர்கள்:ஜேம்ஸ் ப்ரிஸ்ட், ப்ரூக் வோல்போஃர்ட், நிர்மல் வட்கமா, சோபி லிமோவ், எம். மெடினா கோமேஸ், அட்டானு குமார் டத்தா, க்ளவுடியா ஸ்கர்மன், ஃபவுசான் அஹ்மாட், ஜமால் நசீர், குமார் வீரப்பன்

குறிப்பு: கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு என்பது தகவல், ஆலோசனைகள், நோயாளிகள் சேர்த்தல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பரப்புதல் போன்றவற்றை இணைந்து மேற்கொள்ளும் 54 நாடுகளைச் சேர்ந்த 2000 விஞ்ஞானிகள் கூட்டமைபைப் பிரதிநிதிக்கும். எங்களின் ஆய்வு வடிவமைப்பைக் காண எங்கள் தொடக்க வலைப்பதிவை (inaugural blog post) வாசிக்கவும். எங்கள் ஆய்வு மறுபயன்பாட்டுத் தன்மை கொண்டுள்ளதோடு எங்களின் புதிய ஆய்வு முடிவுகளை வலைப்பதிவுகளின் மூலமாகவும் இணைய தளத்தில் உள்ள முடிவுகள் பகுதியின் வழி சுருக்கமாக தொகுத்து தந்துள்ளோம். இங்கு காணப்படும் கலைச்சொற்கள் உங்களுக்கு புதியனவாக இருந்தால், hgi-faq@icda.bio என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.தகவலைகளைப் புதுப்பிப்பதன் மூலம் சரியான தெளிவு கிடைப்பதை அறிந்து நாங்கள் மகிழ்சசி அடைவோம்.

SARS-CoV-2 தொற்று, அறிகுறியற்ற தன்மை அல்லது மிதமான சளி காய்ச்சல் தொடங்கி இறப்பிற்குக் காரணமாகும் தீவிர நோய் வரையிலான பரவலான விளைவுகளை மனிதரிடையே உருவாக்குகிறது. SARS-CoV-2 தொற்று, அறிகுறியற்ற தன்மை அல்லது மிதமான சளி காய்ச்சல் தொடங்கி இறப்பிற்குக் காரணமாகும் தீவிர நோய் வரையிலான பரவலான விளைவுகளை மனிதரிடையே உருவாக்குகிறது, வயதானவர்கள் அல்லது இதர உடல் நிலை பாதிப்புக்குள்ளானவர்களே SARS-CoV-2 தொற்றினால் அதிக அளவிலான அபாயத்தில் உள்ளனர், அதே வேளையில் இளம் வயதினரும் தீவிர நோயினால் பாதிக்கப்படலாம் அல்லது இறக்கவும் செய்யலாம். மனிதர்கள் SARS-CoV-2 தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுதல் அல்லது தீவிர நோய்க்கு எளிதில் பாதிப்புறுதல் போன்ற தாக்கத்தை மனித மரபியல் மாறுபாடுகள் எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பதை அறியவும் புரிந்துகொள்ளவும் கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் ஆய்வு SARS-CoV-2 தொற்றினால் பாதிப்புற்ற மனிதர்களிடையே மரபியல் மாறுபாடுகள், நோய் தீவிரத்தன்மை, எளிதில் பாதிப்புறும் தன்மை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பில் கவனம் செலுத்துகிறது. உலகளவில் உள்ள மிகச் சிறந்த பிற விஞ்ஞானிகள் குழுக்களால் ஆராயப்படும் நோய்க்கிருமி (மரபியல் கிருமி) மரபணு குறியீடு குறித்து எங்களின் ஆய்வு அமைக்கப்படவில்லை. தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் SARS-CoV-2 தொற்றினைக் கண்டறியும் சோதனைகள் ஆகியவற்றுக்கான மேம்பாட்டிற்கு இவை இரண்டுமே முக்கியமானவையாகும்.

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு மார்ச் 2020-இல், கோவிட் -19 அனைத்துலக பரவல் அதன் உச்சத்தைத் தொட்டிருந்த வேளை பின்லாந்தில் உள்ள மூலக்கூறு மருத்துவ நிறுவனம் (FIMM) மற்றும் MIT-இன் ப்ராட் நிறுவனம் மற்றும் ஹார்வார்ட்டைச்சேர்ந்த ஆண்ட்ரியா கன்னா மற்றும் மார்க் டேலி ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்ட்டதாகும்.

உரிமைத் துறப்பு: இந்த ஆய்வின் வழி கிடைக்கும் முடிவுகள் தனிநபர் ஒருவருக்கு மரபணு தகவலைக் கொண்டு கோவிட் -19 தொற்றின் தீவிர மற்றும் எளிதில் பாதிப்புறும் தன்மையின் காரணத்தை கணிக்கும் அளவில் உயர் அளவிலான நம்பிக்கையை இன்னும் எட்டவில்லை. ஆகவே மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பின் வழி கிடைத்த முடிவுகள் நோயாளியின் மரபணு வகையைக் கொண்டு நோயின் தன்மையைக் கண்டறிய பயன்படுத்துவதற்கானதல்ல.

மனித மரபணு மாறுபாடு என்றால் என்ன?

மனித மரபணு குறியீடு, 3 பில்லியன் வேதியல் எழுத்துக்களால் ஆனது (A, T, G, மறறும் C என்னும் சுருக்கக் குறியீட்டாக்கப் பட்டவை). அது நம் கண்ணின் நிறம் தொடங்கி இரத்த வகை வரை குறிமுறைப்படுத்தும். இரண்டு தனிநபர்களின் மரபணு குறியீடு 99.9% ஒத்திருந்து 0.01% வேறுபடுவதே மரபணு மாறுபாடு என்று அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ அனைத்து மரபணு மாறுபாடுகளும் உங்களின் பெற்றோரின் வழி உங்களக்கு வந்திருப்பதோடு ஏறத்தாழ அவை அனைத்தும் உங்கள் குடும்பத்தினருடனும், முன்னோருடனும், ஒரு சிறிய அளவு உலகில் வாழும் மற்றவர்களிடமும் பகிரப்பட்டிருக்கும்.

மனித மரபணு மாறுபாடு எவ்வாறு அளக்கப்படுகிறது?

டி.என்.ஏ வரிசை முறை மற்றும் மரபணு வகைப்படுத்தல் ஆகியன மனித மரபுத்தொகுதியை அளவிட இரண்டு பொதுவான வழிமுறைகளாகும். இந்த இரண்டு வழிகளிலும், ஒரு நபரிடமிருந்து மரபணு குறியீடு (வேதியல் டி.என்.ஏ) இரத்தம் அல்லது உமிழ்நீர் போன்ற மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு நூல் வாசிப்பு முறையைப் போன்று வேதியல் எழுத்துக்களை வரிசைப்படி (A, T, G, அல்லது C) கண்டறிய வேதியல் எதிர்விளைவுகளை பயன்படுத்துகிறோம். ஒரு மரபணு தொகுதியில் உள்ள வேறுபாடுகளையும் இந்த வேறுபாடுகள் ஏற்கனவே வேறு மரபணு ஆய்விலோ பெரிய மக்கள் குழுவிலோ கண்டறியப்பட்டிருந்தால், மரபணுவின் பல்லாண்டுகள் ஆய்வின் அனுபவத்தின் வழி நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.

மனித மரபணு மாறுபாடு எவ்வாறு நோயோடு தொடர்பு படுத்தப்படுகிறது?

மரபணு மாறுபாடுகளைக் கண்டறியும் ஆற்றலானது, மாறுபாடுகளைக் கொண்டுள்ள மரபணு தொகுதி ஒரு நோயோடு தொடர்பு கொண்டுள்ளதா எனபதை ஆராய உதவுகிறது. நாம் கையாளும் எளிமையான மற்றும் நேரடியான வழிமுறை Genome Wide Association Studies (GWAS) என்று அழைக்கப்படுகிறது. GWAS குறித்த எடுத்துக்காட்டு விரிவாக்கத்திற்கு இந்த காணொளி அல்லது தகவல் வரைபடத்தைக் காணவும்.

GWAS-ஐ கொண்டு மரபணு, ஒரு நோயோடு மரபணு மாறுபாட்டுத் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை சோதிக்க முடியும். இந்தக் கேள்விக்கு பதில் கூற, GWAS-க்கு, நோய் கண்டவர்கள் குழுவில் இருந்தும் நோய் அல்லாத குழுவில் இருந்தும் மரபணு வேறுபாடுகள் எவ்வளவு உள்ளன என்னும் எளிய ஒப்பீடு தேவை:

தீவிர நோய் கண்டவர்களின் மரபணு மாறுபாட்டு எண்ணிக்கை, தீவிர நோய் அற்றவர்களின் மரபணு மாறுபாட்டு எண்ணிக்கையோடு வேறுபடுகிறதா?

கோவிட் -19-ஐ GWAS-ஐ கொண்டு ஆய்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக, மரபணுத்தொகுதி முழுமையும் உள்ள மரபணு வேறுபாடுகள் ஒரு நபரை மருத்துவமனையில் சுவாச உதவி (நோய் மற்றும் அதன் தீவிரத் தன்மைக்கு ஒரு அறிகுறியாகும்.)தேவைப்படும் அளவிற்குக் கொண்டுச் செல்கிறதா என்று சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு மரபணு குறியீட்டு (ஒரு வேளை மாறுபட்டிருக்கலாம் ) இடத்திலும் , நாங்கள் நேர்வுகளில் (எ. கா. மருத்துவமனையில் சுவாச உதவியோடு உள்ள கோவிட் -19 பாசிடிவ் நேர்வு) உள்ள மரபணு மாறுபாட்டு எண்ணிக்கையோடு கட்டுப்படுத்தப்பட்ட குழுவின் (எ. கா. மருத்துவமனையில் சேர்க்கப்படாத கோவிட் -19 பாசிடிவ் நேர்வு) எண்ணைக்கையுடன் ஒப்பீடு செய்கிறோம். (படம் 1)

படம் 1: மரபணுவகை கவனிப்பை அடிப்படையாகக் கொண்ட அபாயம் (நன்றி: சோபியா லிமோ)

யு.கே., ஸ்பெயின், யு.எஸ். மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் மக்கள் குழுவில் ஒரே மாறுபட்டு முறை கவனிக்கப்பட்டுள்ளதால், மரபணு மாறுபாடு உண்மையிலேயே நோயோடு தொடர்புடையதாக இருப்பதை நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு உணர்கிறோம். கோவிட்-19 HGI-க்காக தனிப்பட்ட GWAS ஆய்வுகளிடமிருந்து பெறப்பட்ட முடிவுகள் மேட்டா-பகுப்பாய்வு என்று அழைக்கப்படும் ஒரு வழியில் ஒப்பீடும் ஒருங்கிணைப்பும் செய்யப்பட்டுள்ளது.

HGI கண்டுபிடிப்புகளில் மூலம் அறியப்பட்ட, அதிகரித்துள்ள கோவிட்-19 தீவிரத் தன்மையோடு தொடர்புடைய மரபணு மாறுபாடுகள் என்னிடம் உள்ளன. இதனால் எனக்கு உடல் நலக் குறைவோ அல்லது தீவிர விளைவோ ஏற்படுமா?

கட்டாயம் அல்ல. நம் GWAS-இடம் இருந்து பெறப்பட்ட முடிவுகள் அதிக மக்கள் தொகை கொண்ட குழுவில் கோவிட்-19 எளிதில் பாதிப்புறும் தன்மை அல்லது தீவிரத் தன்மையுடன் சம்பந்தப்பட்ட மரபணு மாறுபாடுகளில் இந்த சீர் முறையைக் காண முடியும் என்பதை மட்டுமே நமக்கு கூறுகின்றன. மேலும், நம் ஆய்வு கண்டறிந்த மரபணு மாறுபாடு கோவிட்-19 எளிதில் பாதிப்புறும் தன்மை அல்லது தீவிரத் தன்மைக்கு அதிகம் அல்லது குறைந்த அபாயத்தை அளிக்கும் நிலையோடு தொடர்பு கொண்டிருக்கலாம்.

நம் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறுபாடு அதிக அளவில் அபாயத்திற்கு சிறிய அளவிலான ஏற்றத்தையோ இறக்கத்தையோ அளிக்கும் நிலையோடு தொடர்புடையதாகும். ஆகையால், கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் எந்த நபருக்கு நோய் தீவிரம் அடையும் அல்லது குறைந்த விளைவை ஏற்படுத்தும் என்று இன்னும் அனுமானிக்க வாய்ப்பில்லை. இறுதியாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோவிட்-19 அபாயத்தை விளக்க தங்களின் 'நேரடியாக பயன் பெறுவோர்' மரபணுவகைகள் (எடுத்துக் காட்டுக்கள்: 23andMe, Ancestry.com) மற்றும் கோவிட்-19 HGI கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதை பரிந்துரைக்க மாட்டோம். நீங்கள் கண்டறியப்பட்ட அபாய மாறுபாடுகள் கொண்டவரோ இல்லையோ, உடல்நல அதிகாரிகள் பரிந்துரைக்கும் அதே பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், உங்களுக்கும் பொருந்தும். எப்போதும் தங்களின் மருத்துவ தேர்வுக்கு மருத்துவ வல்லுனர்களோடு கலந்து ஆலோசிக்கவும்.

இந்த ஆய்வு முடிக்கப்பட்டு விட்டதா?

சுருங்கள் கூறின், இல்லை! கோவிட்-19 தொற்று யாருக்கு அதிக தீவிரத்துடனும் அல்லது குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதன் மாறுபடும் தன்மையை முழுமையாக எங்கள் ஆய்வின் கண்டுபிடிப்புகள் விளக்கவில்லை. ஆனால் அதிக ஆய்வுத் தகவல்கள் அதிக பலனைத் தரும் என்பதோடு கோவிட்-19 HGI, மேட்டா பகுப்பாய்வை அதிக GWAS முடிவுகள் குறித்த ஆய்வை கூடுதலான மக்களை ஈடுபடுத்தி வழக்க முறைக்குக் கொண்டு வந்து மீண்டும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பெருமளவிலான ஆய்வுகள் கோவிட்-19 தொற்றுக்கு வருந்தத்தக்க அளவில் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதைக் காட்டினாலும், மரபணுக்கள் மற்றும் நோய் விளைவுகள் ஆகியவற்றிற்கு இடையிலான சீர் முறையைக் கண்டறிவதில் நம் ஆற்றலை இது மேம்படச் செய்கின்றது. மேலும் கோவிட்-19 HGI ஆதரவில் பல திட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன ஆனால் இவற்றிற்கு தனிச்சிறப்பு வாய்ந்த அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன அல்லது இவை குறிப்பிட்ட மக்கள் குழுவோடு தொடர்புடையனவாக அமையும்.

எங்கள் கண்டுபிடிப்புகள் இன்னும் பல, கோவிட்-19 எளிதில் பாதிப்புறும் தன்மையுடன் தொடர்புடைய மனித மரபணு தொகுதிகளின் பகுதிகளைக் கண்டறியும் என்பதில் நம்பிக்கையோடு உள்ளோம். அறிவியல் சமூகத்திற்கும் பொது மக்களுக்கும் எங்களின் பங்களிப்பின் ஒரு பகுதியாக, கோவிட்-19 HGI மேட்டா பகுப்பாய்வு முடிவுகளை எங்கள் வலைதளத்தில் வெளியிடுவோம்.இது மற்ற ஆய்வாளர்கள் மரபணு தொடர்புகளுக்குப் பின்னால் இருக்கும் உயிரியலை நன்கு புரிந்துகொள்ள வடிவமைக்கப்பட்ட சோதனைகளை மேற்கொள்ள துணை புரியும்.

கோவிட்-19 HGI பங்களிப்பாளர்கள் தற்போதைய கண்டுபிடிப்புகளில் ஆழமான புரிதலை தொடக்கிவிட கணக்கீட்டு சோதனைகளை நடத்தியுள்ளனர். தற்போதைய கண்டுபிடிப்புகளின் புரிதலை மேம்படுத்த மற்ற ஆய்வாளர்கள் மனித செல்களில் மற்றும் மிருகங்களிடம் சோதனைகள் நடத்தியுள்ளனர். இந்தத் தகவல்கள் எந்தவிதமான சிகிச்சை நோயைத் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளவும் , நோய்க்கு அதிக அபாயத்தில் உள்ள மக்கள் குழுவையும், கோவிட்-19 பரவலைச் சமாளிக்கும் உலகளாவிய சமூகத்தின் ஆற்றலை மேம்படுத்தவும் இந்த தகவல்கள் உதவலாம் என்பதே இம்முயற்சியின் இலக்காகும்.

கோவிட்-19 HGI என்பது, தனிப்பட்ட மரபணு ஆய்வியலை நடத்துவதோடு நம் மேட்டா பகுப்பாய்விற்கு பங்களிக்கும் உலக அளவில் உள்ள ஆராய்சசியாளர்களின் ஒருங்கிணைப்பாகும். முன் எப்போதும் இல்லாதபடியான மரபியலாளர்கள் அணியைப் பிரதிநிதிப்பதோடு குறிப்பிட்ட நோய்க்கான மரபணுக்களைப் புரிந்துகொள்ள பெரிய அளவிலான அனைத்துலக முயற்சிகளில் ஒன்றாக நம்மையும் உண்டாக்கி இருக்கும் அனைத்துலக பொது நோய் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏறத்தாழ 3033 ஆராய்ச்சியாளர்கள் தற்போது உள்ளனர். இன்றளவில் நம்மிடையே உள்ள அனைத்துலக பங்களிப்பாளர்கள்:

Biobanks - உயிரியல் வங்கிகள்

Clinical studies - மருத்துவ ஆய்வுகள்

DTC Companies - DTC நிறுவனங்கள்

19 நாடுகளிலிருந்து 47 ஆய்வுகள் - பதிவு செய்யப்பட்ட ஆய்வுகளில் 35% (N = 143)

> 2.1 மில்லியன் மரபணு வகை நபர்களிலிருந்து 49,562 கோவிட்-19 பாசிட்டிவ் நேர்வுகள்

47 குழுக்களில் இருந்து (படம் 2)

படம் 2: ஐரோப்பியர் அல்லாத 19 நாட்டினரை உள்ளடக்கிய 47 பங்களிப்பு ஆய்வுகளின் 5-ஆம் நிலை அறுதிப்பாட்டு கோவிட்-19 HGI பங்களிப்பாளர்கள் பட்டியல். ஜனவரி 25, 2021-இன் ஆண்ட்ரியா கன்னா அவர்களின் படைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது. நீங்கள் பதிவு செய்யப்பட்ட ஆய்வுகளை இங்கே காண முடியும் அதே வேளை பங்களிப்பு ஆய்வுகளில் குறிப்பிட்ட ஆய்வாளர்களின் ஏற்றுக் கோடல்களை இங்கே காண முடியும்.

பின்லாந்தில் உள்ள மூலக்கூறு மருத்துவ நிறுவனம் (FIMM)-இல் மேட்டா பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதிக அளவில் தகவல்களை அந்த சுற்றின் போது வழங்கிய பதிவு செய்யப்பட்ட ஆய்விகளிலிருந்து பெறப்பட்ட புதிய தகவல்களை இந்த அறுதிப்பாடு உள்ளடக்கி இருக்கும். தற்போது வெவ்வேறு வம்சாவளியில் வந்த ஏறத்தாழ 2 மில்லியன் நபர்களைக் கொண்ட 19 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் எங்களிடம் உள்ளன (படம் 3). நீங்கள் பதிவு செய்யப்பட்ட ஆய்வுகளை இங்கே காண முடியும் அதே வேளை பங்களிப்பு ஆய்வுகளில் குறிப்பிட்ட ஆய்வாளர்களின் ஏற்றுக் கோடல்களை இங்கே காண முடியும். ஒரு சில தனி நபர் பங்களித்த ஆய்வுகள் தனியார் நிறுவங்களால் நிதியுதவி பெற்று நடைபெற்றிருந்தாலும், முடிவுகள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டவை.

Effective sample size - பயனுள்ள மாதிரி அளவு

Analysis Type - பகுப்பாய்வு வகை

Reported SARS-CoV-2 infection - பதிவு செய்யப்பட்ட SARS-CoV-2 தொற்று

Critically ill Covi-19+ - கோவிட்-19 + தீவிர நோய்

Hospitalized Covi-19+ - கோவிட்-19 + மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள்

Effective sample size by ethnicity - இன வரிசையில் பயனுள்ள மாதிரி அளவு

படம் 3. கோவிட்-19 HGI முயற்சிகளுக்குப் பங்களிக்கும் ஆய்வுகளின் கண்ணோட்டம் மற்றும் மேட்டா பகுப்பாய்வுகள் உள்ள முக்கிய வம்சாவளி குழுக்களின் கூட்டமைவு. அறுதிப்பாடு 5-இல், ஐரோப்பியர் அல்லாத நாட்டு மக்களைக் கொண்ட 19 ஆய்வுகள் : 7 ஆப்ரிக்க அமெரிக்கர்கள், 5 அட்மிக்ஸ்ட் அமெரிக்கர், 4 கிழக்கு ஆசியர்கள், 2 தென் ஆசியர்கள் மற்றும் 1 அரேபியர். வைரம், வெவ்வேறு புவியியல் இடங்களிலிருந்து பெறப்பட்ட பயனுள்ள மாதிரி அளவைக் (அறிவியல் நிகழ்வுகளில் புள்ளிவிவரப்படி குறிப்பிடும்படியான விளைவைக் காட்டும் மாதிரி அளவு ) காட்டுகிறது

இந்த ஆய்வு சக ஆய்வாளரால் மதிப்பாய்வு செய்யப்பட்டதா?

இந்நேரத்தில், அச்சுக்கு முந்தைய படிவமே சக ஆய்வாளரால் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகும். சுருங்கக்கூறின் இந்த படிவத்தின் இந்த நிலையில்தான் தற்போது நாம் சக ஆய்வாளர் மதிப்பாய்வு செயல்முறையில் உள்ளோம். ஆனால் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்: சக ஆய்வாளரால் செய்யப்படும் மதிப்பாய்வு என்றால் என்ன?

விஞ்ஞானிகள் அடிக்கடி தங்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வறிவு சார்ந்த மூலப் பிரதி மூலம் தொடர்பு கொண்டு ஆய்வறிவு சார்ந்த ஆய்விதழின் பின்னூட்டத்தைக் கோருவர். இந்த ஆய்விதழ் மற்ற ஆய்வறிவு சார்ந்த வல்லுநர்களைத் தொடர்பு கொண்டு (சக விஞ்ஞானிகள்) மூலப் பிரதிக்கான அவர்களின் கருத்தைக் வழங்கும்படி கேட்பதோடு சில சமயங்களில் மாற்றங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.இதுவே சக விஞ்ஞானிகள் மதிப்பாய்வு என்று அழைக்கப்படுகிறது. சக விஞ்ஞானிகளின் மதிப்பாய்வு செயல்முறையின்படி மூலப் பிரதியில் குறிப்பிடப்பட்டவை யாவும் சரி என்பதாகாது; புதிய தகவல்கள் உருவாகும்போது ஏற்கனவே தோன்றிய கருத்துக்கள் மறு மதிப்பாய்வு செய்யப்படும் ஆனால், ஒரு ஆய்வு மிகச் சிறந்த ஒன்றாக அமைய சக விஞ்ஞானிகளின் மதிப்பாய்வு என்பது முக்கியமானதாகும். சில வேளைகளில், ஆய்வியல் படிவங்கள் எழுதப்படுவதற்கும் மூல பிரதிக்கு சக ஆய்வாளர்களின் மதிப்பாய்வு பெறுவதற்கும் ஆண்டு கணக்கில் நேரம் எடுக்கும் என்பதோடு அந்த ஆய்வு வெளியிடுவதற்கும் தாமதம் ஆகலாம்.ஆகையால், ஒரு சக விஞ்ஞானியின் மதிப்பாய்வைக் கொண்டிருக்கும் ஆய்வு படிவத்தை குறிப்பிடும் போது, ஒரு ஆய்வை நாம் இதுவரை அறிந்த மற்றும் இதர விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும். இறுதியாக சக விஞ்ஞானிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்ட மூலப் பிரதிகளில் பல, படிப்பதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்பதோடு, விஞ்ஞானிகள், மாணவர்கள், அல்லது பணம் செலுத்த வசதியற்ற பொது மக்கள் போன்றோருக்கு இவை அணுக முடியாத நிலையில் உள்ளன.

நம் குழு இத்துறையின் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது என்பதோடு நாம் ஒவ்வொரு முயற்சியையும் பிழைகள் அற்ற விஞ்ஞானப் படைப்பாக உருவாக்குகிறோம். இந்தப் படைப்பு இன்னும் சக விஞ்ஞானிகளால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. அறிவியல் சார்ந்த சமூகத்திற்கு முடிவுகள் தயார் நிலையில் வலைதளத்தில் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். கோவிட்-19 குறித்த வளர்ந்து வரும் தகவல் அறிவுக்கான பரந்த அணுகு வழியை உத்வேகத்தோடு வழங்குவதே எங்கள் பணிக்கு வழிகாட்டும் கொள்கையாக நாங்கள் கொண்டிருக்கிறோம். கோவிட்-19 HGI-யின் அணுகுமுறையை, (முடிவுகளை அல்ல) விளக்கும் கட்டுரை சக விஞ்ஞானிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு மே மாதத்தில் வெளியிடப்பட்டது. அச்சுப் பதிப்பிற்கு முந்தைய எங்களின் மூலப் பிரதி இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது: இந்தப் பணி மரபணு பகுப்பாய்வுகளிலிருந்து பெறப்பட்ட முடிவுகளைக் காட்டுகிறது ஆனால் சக விஞ்ஞானிகளால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

நன்றி நவில்தல்

கெய்ட்லின் கூனி, சிஜி சி, கேரன் சுசி, ஆண்ட்ரியா கன்னா, மற்றும் அலீனா சான், ஆகியோருக்கு சிந்தனையார்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி.